Header Ads

அஜீத்துக்கு வில்லியாகும் தன்ஷிகா

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் தனது 55-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் அஜீத்துக்கு வில்லன்களாக அருண் விஜய்யும், ஆதியும் மோதுகிறார்கள். இந்நிலையில், இப்படத்தில் மேலும் ஒரு வில்லியை சேர்க்கவுள்ளார் கௌதம் மேனன். அந்த வில்லி வேடத்திற்கு ‘பரதேசி’ படத்தில் நடித்த தன்ஷிகாவை தேர்வு செய்துள்ளார். இவருடைய கதாபாத்திரம் இப்படத்தில் ஹைலைட்டாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

சமீபத்தில் அனுஷ்கா, அஜீத் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கிய கௌதம் மேனன், இப்படத்தின் படப்பிடிப்பை பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே படமாக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.