Header Ads

மாயமான மலேசிய விமானத்தை தேட புதிய முயற்சி; சர்வதேச விசாரணைக்கு மலேசியா ஒப்புதல்

239 பேருடன் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் 'எம்எச் 370' கோலாலம்பூரில் இருந்து சீனத்தலைநகர் பீஜிங் சென்ற வழியில், கடந்த மாதம் 8-ந்தேதி நடுவானில் மாயமானது. அந்த விமானத்தின் கதி என்ன ஆனது என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை.

இருப்பினும், இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என்ற ரேடார் தகவலின் பேரில், விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து வந்த 'பிங்' சமிக்ஞையை கேட்டு, அது இருக்கிற இடத்தை தேடிக்கண்டு பிடிக்கும் முயற்சியில் 'புளுபின்-21' என்ற நீர்மூழ்கி 'ரோபோ' பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடலுக்கு அடியில் 80 சதவீத பரப்பை அந்த நீர்மூழ்கி ரோபா ஸ்கேன் செய்தும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.

இந்த நிலையில், 29 ஆண்டுகளுக்கு முன்பு டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை கண்டுபிடிக்க பயன்படுத்திய ஆற்றல் வாய்ந்த முறையினை பயன்படுத்துவது தொடர்பாக ஆஸ்திரேலியா ஆய்வு செய்து வருகிறது. இதுதொடர்பாக மலேசியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளை ஆஸ்திரேலியா ஆலோசித்து வருகிறது. இந்தத் தகவலை ஆஸ்திரேலிய ராணுவ மந்திரி டேவிட் ஜான்சன் தெரிவித்தார்.

இந்நிலையில் மலேசிய அமைச்சரவை மாயமான மலேசிய விமான விவகாரம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த ஒப்புதல் அளித்துள்ளது என்று அந்நாட்டு போக்குவரத்து துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹூசேன் கூறியுள்ளார்.

கோலால்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஹூசேன், விமான மாயம் குறித்து விசாரணை நடத்தி, விமான விபத்துக்கான காரணத்தை அறிந்து, எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்களை தவிர்ப்பதே சர்வதேச விசாரணை குழுவின் முக்கிய நோக்கம் என்று கூறியுள்ளார்.

No comments:

Powered by Blogger.