நோவா படத்தில் முத்த காட்சியில் நடித்ததில் உதட்டில் ரத்தம் வழிந்தது- எம்மா வாட்சன்
ஹாரி பாட்டர் படங்களில் நடித்து பிரபலமானவர் எம்மா வாட்சன். இங்கிலாந்து நடிகையான வாட்சன் கிறிஸ்தவர்களின் வேத நூலான பைபிளில் வரும் நோவா கதாபாத்திரத்தை மையமாக கொண்ட நோவா படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் டக்ளஸ் பூத் என்பவருக்கு மனைவியாக நடித்துள்ள வாட்சன் காட்சி ஒன்றின்படி, பூத்திற்கு முத்தம் கொடுக்க வேண்டும். அதற்கான காட்சி படமாக்கப்பட்டது. ஆனால், இந்த காட்சியில் நடிப்பதற்கு இருவரும் மிகவும் சிரமப்பட்டனர். முதல் 4 மற்றும் 5 காட்சிகள் எடுக்கப்பட்டபோது நன்றாக இருந்துள்ளனர். ஆனால் 6வது முறையாக காட்சி நன்றாக வருவதற்காக படமாக்கப்பட்டபோது, இருவரும் முட்டி மோதி கொண்டனர்.
இதில், எம்மா வாட்சனின் உதட்டில் ரத்தம் வழிந்துள்ளது. இதே போன்று டக்ளஸ் மூக்கும், வாயும் வீங்கி போனது. இருவரும் காட்சி எடுத்து முடிப்பதற்குள் சோர்ந்து போய் விட்டனர். இதனை பேட்டி ஒன்றில் நடிகை எம்மா வாட்சன் தெரிவித்துள்ளார்.

No comments: