Header Ads

கருப்பு பெட்டி செயல் இழக்கும் ஆபத்து: இந்தியன் ஓசோன் பகுதியில் மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரம்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு புறப்பட்ட விமானம் கடந்த 7–ந்தேதி மாயமாகிவிட்டது.  அதில் இருந்த 239 பயணிகள் கதி என்ன என்று தெரியவில்லை. மாயமான விமானம் கடலில் விழுந்து இருக்கலாம் என கருதி 15க்கும் மேற்பட்ட நாடுகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், மாயமான மலேசிய விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டியில் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரியின் ஆயுள் காலம் இன்னும் ஓரிரு நாட்களில் முடியவிருப்பதால், அதற்குள் கருப்பு பெட்டியை கண்டுபிடிகும் முயற்சியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

மலேசிய விமானத்தை இந்திய பெருங்கடல் பகுதியில் கடலுக்கடியில் தேடும் முயற்சி நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் 10 ராணுவ விமான்ங்கள் மற்றும் 11 போர்கப்பல்கள் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.

ஆறு வாரங்களில் எதுவும் கண்டுபிடிக்கவில்லை என்றால் நாங்கள் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபடுவோம். ஏனெனில் விமானத்தின் ஏராளமான பாகங்கள் மிதக்கும் தன்மையுடவை என்று ஓய்வு பெற்ற தளபதி மார்ஷல் ஆங்கள் ஹாஸ்டன் தெரிவித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.