ரஜினியின் அடுத்த பட நாயகி அனுஷ்கா-சோனாக்ஷி சின்ஹா?
சூப்பர் ஸ்டார் ரஜினி ‘கோச்சடையான்’ படத்திற்கு பிறகு யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்கிற செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவர் பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளதாகவும், அப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கப்போவதாகவும் செய்தி உலாவியது.
ஆனால், இப்போது ரஜினி நடிக்க போகும் அடுத்தப்படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்தான் இயக்கப்போகிறாராம். பொன்.குமரன் என்பவர் கதை, வசனம் எழுதுகிறார். திரைக்கதை அமைத்து படத்தை இயக்குகிறார் கே.எஸ்.ரவிக்குமார்.
இப்படத்தின் பூஜை வருகிற ஏப்ரல் 20-ந் தேதி கோலாகலமாக நடக்க உள்ளதாம். அதைத்தொடர்ந்து படப்பிடிப்பையும் தொடங்க உள்ளனர். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்கா, சோனக்ஷி சிங்கா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
கன்னடத்தை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் இப்படத்தை தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.

No comments: