Header Ads

எம்.ஜி.ஆரின் எங்க வீட்டுபிள்ளை ரீமேக்கில் விஜய்?

எம்.ஜி.ஆரின் ‘எங்க வீட்டு பிள்ளை’ படம் ரீமேக் ஆகிறது. இந்த படம் 1965ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இதில் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்து இருந்தார். நாயகியாக சரோஜா தேவி நடித்தார். சாணக்யா இயக்கினார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்து இருந்தார். 

இப்படத்தில் இடம் பெற்ற ‘நான் ஆணையிட்டால்’, ‘குமரி பெண்ணின் உள்ளத்திலேயே’, ‘மலருக்கு தென்றல் பகையானால்’, ‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்’, ‘பெண் போனாள்’ போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் கலக்கின. இந்த படத்தை தமிழில் மீண்டும் ‘ரீமேக்’ செய்ய டைரக்டர் செல்வபாரதி திட்டமிட்டுள்ளார். இதில் எம்.ஜி.ஆர்.கேரக்டரில் நடிக்க விஜய்யிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. 

ஏறகனவே விஜய்யை வைத்து பிரியமானவளே, நினைத்தேன் வந்தாய், வசீகரா போன்ற படங்களை டைரக்டு செய்துள்ளார். இதன் ரீமேக்கில் நடிப்பது பற்றி விஜய் ஆலோசித்து வருகிறார். விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவர உள்ளது.

No comments:

Powered by Blogger.