கோச்சடையான் படம் பிசினஸ் ஆகவில்லை! உண்மையை போட்டு உடைத்த கேயார்..!
ரைப்படத்துறையில் தினமும் ஏதாவது ஒரு பட விழா நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. அவ்விழாக்களில் மைக் பிடிக்கும் பிரபலங்கள் சம்பிரதாயமாக பேசிவிட்டு செல்வார்கள். தமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான கேயார் விதிவிலக்கு. மனதில் பட்ட உண்மைகளை பளிச்சென பேசிவிடுவார்.புதுமுகங்கள் நடித்த நாங்கல்லாம் ஏடாகூடம் என்ற படத்தின் இசைவெளியீட்டுவிழா நேற்று நடைபெற்றபோதும் இப்படித்தான்...!
பேச்சின் துவக்கத்தில் படத்தில் பணியாற்றிய அனைவரையும் பாராட்டிய கேயார்.... “இந்தப் படத்தின் தயாரிப்பாளர் இப்பத்தான் ஆடியோ பங்ஷனை முடிக்கிறார். இன்னமும் படத்தை ரிலீஸ் செய்யணும்.. அதுக்கு முன்ன படம் விக்கணும்.. படம் விக்கலையேன்னு வருத்தப்பட வேண்டாம். இப்போ ரஜினி நடிச்ச கோச்சடையான் படமே விக்க முடியாமத்தான் இருக்கு. அவருக்கே அதுதான் நிலைமை.. இங்க நல்ல படம், கெட்ட படம் என்றெல்லாம் இல்லை. சின்ன படம், பெரிய பட்ஜெட் படம்ன்னு மட்டும்தான் இருக்கு. அதுனால தயாரிப்பாளர் தன்னோட படத்தை நம்பி வியாபாரம் பேசணும்..” என்று பேசிக்கொடணடே போக, விழாவுக்கு வந்தவர்கள் ஒரு கணம் அதிர்ந்து போனார்கள்.
ரஜினி நடித்த 'கோச்சடையான்' படம் விற்பனையாகாத விஷயம் பகிரங்கமாக வெளியானது திரைப்படத்துறையில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கோச்சடையான் படம் ஏன் விற்பனையாகவில்லையாம்? அதிக விலை சொல்வதுதான் முதல் காரணம். அடுத்து.. அப்படத்தின் தயாரிப்பாளர்களின் முந்தைய கடன்களை எல்லாம் இந்தப்படத்தில் சம்பாதித்து அடைத்துவிட எண்ணுகிறார்களாம்.

No comments: