கோஹ்லியை திருமணம் செய்ய டிவிட்டரில் தூது விட்ட இங்கிலாந்து வீராங்கனை
மிர்பூர்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் வீராங்கனை டேனியல் ஹயாத் தனது டிவிட்டர் பக்கத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் இளம் வீரர் விராட் கோஹ்லி வேகமாக வளர்ந்து வரும் 25 வயது வீரர் ஆவார். தற்போதைய போட்டிகளில் மிகவும் சிறப்பாக விளையாடி இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்கின்றார். கடைசியாக நடந்த டி20 உலககோப்பை அரையிறுதிப் போட்டியில் அவரது சிறப்பான ஆட்டத்தால் இந்தியா வெற்றியடைந்தது. அந்த போட்டியை பார்த்த 22 வயதான டேனியல் ஹயாத் விராட் கோஹ்லியின் சிறப்பான ஆட்டத்தால் தனது மனதை பறிகொடுத்துள்ளார்.
டேனியல் ஹயாத் 22 வயதான சிறப்பாக விளையாடும் இளம் வீராங்கனை, அணியில் எப்பொழுதும் கலகலப்பாகவும், இருப்பார். இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்ததால், டிவிட்டர் பக்கம் கலைகட்டியுள்ளது. எனவே அதற்கு பல பதில்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. இதில் விராட் கோஹ்லி ஏற்கனவே பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவிட் கமிட் ஆகிவிட்டார் என்று தெரிவிக்க, ஹயாத் அப்படி அருக்காது என்று நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.

No comments: