நிர்வாண படத்தை வெளியிடுவேன்’ நர்சுக்கு டார்ச்சர் கொடுத்த மருத்துவமனை மேலாளர் கைது
கோவில்பட்டி : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சுத்தம்பட்டியைச் சேர்ந்த செல்வகுமார் மனைவி ஆர்த்தி (24). கோவில்பட்டி பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். கணவர் செல்வகுமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.ஆர்த்தி வேலை பார்க்கும் மருத்துவமனை மேலாளர் ரவிச்சந்திரன் (40) என்பவர் அடிக்கடி இரட்டை அர்த்த வார்த்தைகளை பேசி செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரிடம் சில்மிஷங்களிலும் ஈடுபடுவாராம். இந்நிலையில் கடந்த 13ம் தேதி ஆர்த்தி தனது கணவருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் இருந்து போனை பிடுங்கிய ரவிச்சந்திரன், ‘‘உன் மனைவியை நான் நிர்வாணமாக படம் எடுத்து வைத்துள்ளேன்.
இனி அவள் எனக்குதான்‘‘ என்று கூறி மிரட்டி உள்ளார்.இதுகுறித்து மருத்துவமனை உரிமையாளரான ராமமூர்த்தியின் மனைவி டாக்டர் செம்மலரிடம் ஆர்த்தி கூறியுள்ளார். ஆனால் அவர் மேலாளர் ரவிச்சந்திரன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதையடுத்து கோவில்பட்டி மேற்கு போலீசில் ஆர்த்தி புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி ரவிச்சந்திரனை கைது செய்தனர். மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் செம்மலர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments: