காதல் விவகாரம்: மனைவியை கொன்று கால்வாயில் வீசிய கணவன்
உத்தரபிரதேசம் காசியாபாத் அருகே உள்ள சாரூர்பூரை சேர்ந்தவர் மனோஜ் இவருடைய மனைவி சங்கீதா (வயது 26) இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் உள்ளூரில் உள்ள ஒரு நீரோட்டம் உள்ள அழகிய கால்வாயை சுற்றிப்பார்க்க சென்றனர். பின்னர் வீட்டிற்கு மனோஜ் மட்டும் திரும்பி உள்ளான் வீட்டில் வந்து தனது மனைவி எதிர்பாரதவிதமாக தண்ணீருக்குள் விழுந்து விட்டதாக நாடகமாடி உள்ளார். நான் என் மனைவியை இழந்து விட்டேன் என கதறி அழுது நடித்து உள்ளார்
இது குறித்து சங்கீதாவின் பெற்றோர்கள் போலீசில் புகார் செய்து உள்ளனர். போலீசார் மனோஜிடம் விசாரணை நடத்தினர், விசாரணையில் காதல் விவகாரத்தில் மனோஜ் மனைவியை கொன்று கால்வாயில் வீசிய விவரம் தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் கூறுகையில் மனோஜ் சட்டத்தை முட்டாளக்க பார்த்து உள்ளான்.பெற்றோரின் புகாரை தொடர்ந்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம் என கூறினர்.

No comments: