நானும், சுஜிபாலாவும் கணவன்-மனைவியாக வாழ்ந்தோம் கொலைமிரட்டல் விடுக்கவில்லை-டைரக்டர் ரவிக்குமார்
டைரக்டர் ரவிக்குமார் தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:
நானும், சுஜிபாலாவும் கணவன்-மனைவியாக வாழ்ந்தது உண்மை. உண்மை படத்தை தொடங்கிய போதே எங்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதன்பிறகு தான் அவரை நான் பெண் கேட்டேன். நிச்சயதார்த்தம் நடந்தது. சுஜிபாலா தற்கொலைக்கு முயன்றதால் நாங்கள் பிரிய வேண்டியதாகிவிட்டது.
மறுபடியும், உண்மை படத்தின் படப்பிடிப்பை சில மாதங்களுக்கு பின் தொடங்கியபோது நாங்கள் இரண்டு பேரும் நெருங்கி பழகினோம். சுஜிபாலா என் மீது அன்பாக இருந்தார். எனக்கு அவர் தங்கசங்கிலி பரிசளித்தார். நாங்கள் இருவரும் கணவன்-மனைவியாக வாழ்ந்தோம். எங்களை சுஜிபாலாவின் தாயார் பிரித்துவிட்டார்.
நான் ராயப்பேட்டையில் உள்ள நடனப்பள்ளிக்கு போனது உண்மை. பேஸ்புக்கில் சுஜிபாலா இன்னொரு ஆணுடன் கட்டிப்பிடித்தப்படி இருந்ததை சுட்டிக்காட்டி, அவரிடம் நியாயம் கேட்டேன். எங்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நான் யாருடன் வேண்டுமானாலும் தொடர்பு வைத்திருப்பேன் அதை கேட்க நீங்கள் யார்? என்று சுஜிபாலா கேட்டார். அந்த ஆத்திரத்தில் அவரை நான் அறைந்துவிட்டேன். ஆனால் கொலைமிரட்டல் விடுக்கவில்லை.
இவ்வாறு டைரக்டர் ரவிக்குமார் கூறினார்.

No comments: