Header Ads

விக்ரம் பிரபு - ஸ்ரீதிவ்யாவை இயக்கும் எழில்!

விமல், பிந்துமாதவி, சூரி மற்றும் பலர் நடித்து வெளியான படம் 'தேசிங்கு ராஜா'. இப்படத்தை எழில் இயக்கினார். இவர் அடுத்து இயக்கும் படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கிறார்.

விக்ரம் பிரபு நடித்த 'அரிமா நம்பி' விரைவில் திரைக்கு வர இருக்கிறது, தற்போது கெளரவ் இயக்கத்தில் 'சிகரம் தொடு' படத்திலும், சத்யசிவா இயக்கத்தில் 'உஸ்தாத் ஹோட்டல்' படத்தின் தமிழ் ரீமேக்கான 'தலப்பாகட்டி' படத்திலும் நடிக்கிறார்.



'சிகரம் தொடு' படத்தில் மோனல் கஜ்ஜார் ஹீரோயினாகவும், 'தலப்பாகட்டி' படத்தில் நஸ்ரியா ஹீரோயினாகவும் நடிக்கின்றனர்.

இந்தப் படங்களை முடித்த பிறகு எழில் இயக்கும் படத்தில் நடிப்பாராம் விக்ரம்பிரபு. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார்.

No comments:

Powered by Blogger.