சந்தானம் கலாய்ப்பாரே! போன் போட்டு கதறிய தேவயானி..video
விண்ணுக்கும், மண்ணுக்கும், நீ வருவாயா போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமா உலகில் வலம் வந்தவர் ராஜகுமாரன். இவர் நடிகை தேவயானியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கடந்த ஆண்டு திருமதி தமிழ் படத்தில் ஹீரோவாக நடித்த ராஜகுமாரன், தற்போது சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் காமேடி வேடத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் நடிக்க கூடாது என ராஜகுமாரன் வீட்டில் நிறைய எதிர்ப்புகள் வந்ததாம். காமெடி வேடத்தில் நடித்தால் எல்லோரும் கிண்டலாக பேசுவார்கள் என்று தடைவிதித்தனராம்.
ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் சந்தானம் படத்தில் சோலார் ஸ்டார் என்ற பட்டத்தோடு நடித்துள்ளாராம்.
இது பற்றி சந்தானம் கூறுகையில், சந்தானம் படத்தில் நடிக்காதீர்கள் அவர் உங்களை கிண்டலாக பேசுவார் என்று என் வீட்டில் உள்ளவர்கள் சொல்கிறார்கள் என்று ராஜகுமாரன் என்னிடம் கூறினார். நான் உங்களை கிண்டலடித்தால் நீங்களும் பதிலுக்கு கிண்லடிக்கலாம் என்று சொன்னேன்.
இதனையடுத்து ராஜகுமாரன் என் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார், இப்போது நடித்தும் முடித்து விட்டார், படத்தில் நடித்த அனைவரும் விழாவுக்கு வந்திருந்தனர். ராஜகுமாரன் மட்டும் வரவில்லை.

No comments: