Header Ads

நடிகர் விஜய்யை கேவலமாக பேசிய மனிதர்: காணொளி வெளியானதால் கொந்தளிப்பில் ரசிகர்கள்... - video

நடிகர் விஜய் பற்றி யாரோ ஒரு நபர் தரக்குறைவாக பேசிய காணொளி ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜே.எஸ். ரிபாயி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், சில மணி நேரங்களுக்கு முன்பு இணைய தளத்தில் நடிகர் விஜய் பற்றி தரக் குறைவாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ஒருவர் பேசியுள்ளார் என பலர் தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் இணைய தளத்தை ஆய்வு செய்தபோது நடிகர் விஜய் குறித்து அவதூறாக பேசியவருக்கும் தமுமுகவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இதுபோன்ற பேச்சுகளை தமுமுக வன்மையாக கண்டிக்கிறது, இதுபோன்ற அவதூறான பேச்சுகளை சமூக வலை தளங்களிலோ, இணையதளத்திலோ எழுதவோ, பேசவோ கூடாது என்பதை தமுமுக தலைமை தமது தலைமை நிர்வாகிகள் முதல் கிளை உறுப்பினர்கள் வரை கண்டிப்பாக தெரிவித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வெளியான இக்காணொளியால் விஜய் ரசிகர்கள் பெரும் கொந்தளிப்பில் காணப்படுவதாக தகவல்கள தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Powered by Blogger.