ஜில்லா' நாளை ரிலீஸ் ஆகுமா? நெருக்கடியில் விஜய்!
நாளை உலகமெங்கும் 'ஜில்லா' படம் ரிலீஸ் ஆகிறது. 'ஜில்லா' படக்குழு தீயாய் வேலை செய்து கொண்டிருக்கும் சமயத்தில் 'ஜில்லா' படத்துக்குத் தடை கேட்கப்பட்டுள்ளது.
சேலையூரை சேர்ந்தவர் ஆர். மகேந்திரன். இவர், சென்னை 16-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
''சவுமிதா ஸ்ரீ ஆர்ட்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ஆகியோர் தெலுங்கில் நடித்த ‘பகீரதா‘ என்ற படத்தை தமிழில் ‘ஜில்லா’ என்ற பெயரில் மொழியாக்கம் செய்தேன்.
இந்த ‘ஜில்லா’ என்ற படத்தின் தலைப்பை தென்னிந்திய திரைப்படம் மற்றும் டி.வி. தொடர் தயாரிப்பாளர் கில்டில் 2008-ம் ஆண்டு பதிவு செய்தேன்.
இந்த தமிழாக்கம் செய்யப்பட்ட 'ஜில்லா' படத்தை திரையரங்குகளில் வெளியிட தணிக்கை சான்றிதழை 28-5-2008 அன்று பெற்றுள்ளேன். இதன்பின்னர் இந்தப் படத்தை வெளியிட தகுந்த நேரத்தை பார்த்துக் காத்திருந்தேன்.
இந்த நிலையில், நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜில்லா’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட படம் வருகிற 10-ந்தேதி வெளியாகப் போவதாக பத்திரிகையில் விளம்பரம் வெளியாகியுள்ளது.
எனவே விஜய் நடித்துள்ள 'ஜில்லா' என்ற பெயரில் படத்தை வெளியிடத் தடை விதிக்கவேண்டும்'' என்று மகேந்திரன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோர்ட்டு உத்தரவின்படி, எதிர்மனுதாரரான 'ஜில்லா' படத்தின் தயாரிப்பாளர் சூப்பர் குட்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் உள்ளிட்ட பலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. 'தலைவா' படம் ரிலீஸ் பிரச்னை தமிழகமே அறியும். இப்போது 'ஜில்லா'வுக்கு வேறு வடிவத்தில் சிக்கல் வந்திருக்கிறது.
இந்த தருணத்தில் விஜய் விரும்பினால் எங்கள் கட்சியில் சேரலாம் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இந்த நெருக்கடிகளை விஜய் எப்படி சமாளிக்கப்போகிறார்?
No comments: