வீரம் திரை விமர்சனம்
Production: Bharathi Reddy
Cast: Ajith, Appukutty, Bala, CRANE MANOHAR, Devadharshini, Elavarasu, Manochithra, Mayilsami, Munish, Nadodigal Abhinaya, Periyardasan, Rameshkanna, Santhanam, Suhail, Tamannah Bhatia, Vidharth, Vidhyulekha Raman
Direction: Siva
Screenplay: Siva
Story: Bhoopati Raja
Music director: Devi Sri Prasad
Background score: Devi Sri Prasad
தங்களது 100வது தயாரிப்பாக தரமான ஒரு குடும்பத்துடன் சந்தோசமாக பார்க்க வல்ல படத்தை கொடுத்த ‘வியஜா பிரொடக்ஷன்’ வெருமனையே 50 செக்கன்களில் தக்களுக்கான அறிமுகத்தை கொடுத்து படத்தை ஆரம்பிக்கின்றது. இதில் கவனிக்க வேண்டியது எம்.ஜீ.ஆர் இன் படம் அடுத்து ரஜினியின் படம் என்று வரிசையில் காட்டிய பின்னர் ‘வியஜா பிரொடக்ஷன்’ வழங்கும் அஜித்குமாரின் வீரம் என படத்தின் எழுத்தோட்டம் தொடங்குகின்றது! அப்போதே படத்தின் வெற்றியை சொல்லாமல் சொல்லி முடிக்கின்றது தயாரிப்பாளர் நிறுவனம்!!!
Cast: Ajith, Appukutty, Bala, CRANE MANOHAR, Devadharshini, Elavarasu, Manochithra, Mayilsami, Munish, Nadodigal Abhinaya, Periyardasan, Rameshkanna, Santhanam, Suhail, Tamannah Bhatia, Vidharth, Vidhyulekha Raman
Direction: Siva
Screenplay: Siva
Story: Bhoopati Raja
Music director: Devi Sri Prasad
Background score: Devi Sri Prasad
![]() |
veeram movie review |
தங்களது 100வது தயாரிப்பாக தரமான ஒரு குடும்பத்துடன் சந்தோசமாக பார்க்க வல்ல படத்தை கொடுத்த ‘வியஜா பிரொடக்ஷன்’ வெருமனையே 50 செக்கன்களில் தக்களுக்கான அறிமுகத்தை கொடுத்து படத்தை ஆரம்பிக்கின்றது. இதில் கவனிக்க வேண்டியது எம்.ஜீ.ஆர் இன் படம் அடுத்து ரஜினியின் படம் என்று வரிசையில் காட்டிய பின்னர் ‘வியஜா பிரொடக்ஷன்’ வழங்கும் அஜித்குமாரின் வீரம் என படத்தின் எழுத்தோட்டம் தொடங்குகின்றது! அப்போதே படத்தின் வெற்றியை சொல்லாமல் சொல்லி முடிக்கின்றது தயாரிப்பாளர் நிறுவனம்!!!
படத்தில் அஜித்துக்கு நான்கு தம்பிகள்.(இது எல்லோருக்கும் தெரிந்ததே..!!!) படம் ‘ஒட்டச்சரித்திரம்’ என்ற இடத்தில் இருந்து ஆரம்பிக்கின்றது. படத்தில் தம்பிகள் தான் தனக்கு எல்லாமாக வாழும் அண்ணன். அண்ணன் தான் தங்களுக்கு எல்லாம் என்று வாழும் தம்பிகள். படத்தில் அஜித், 4 தம்பிகள் ஊருக்குள் அநியாயம் செய்யும் எல்லோரையும் ‘சாப்பாடு போட்டு அதன் பின்னன் வெளுத்து வாங்குகின்றார்’ ஏங்க சாப்பாடு போட்டு சாப்பிட்ட பின்னர் வெளுக்குறீங்கண்ணு ஒருவர் கேட்க ‘ஏன்னா... எங்க அடிய வாங்க தெம்பு வேணும்...அதுக்காகத்தான்’ என்று பதில் சொல்லும் அஜித் படத்தின் இன்னொரு எம்.ஜி.ஆர் தான். இவர்கள் இப்படி வம்பை விலைக்கு வாங்க... பொலீஸ் இவர்களை பிடிக்க வ்ர அவர்களுக்கு முன் ஜாமீன் எடுத்தே வைக்கும் வக்கீல் கதாப்பாத்திரத்தில் சந்தானம் வருகின்றார். படம் முழுவதும் அஜித் சந்தானம் கூட்டனி சிரிக்க வைக்கின்றது என்பது இன்னும் கவனம் செலுத்த வேண்டியது.
அஜித்துக்கு கல்யாணம் பிடிக்காது அதுக்கான காரணமாக அஜித் சொல்லு காரணம் ‘பொண்ணு என்னவள் நம்ம வாழ்க்கைக்குள் வந்துட்டா அவளுக்கா நாம மாற வேண்டி இருக்கும், நமக்காக அவ மாற வேண்டி இருக்கும்.. ஏன் இந்த கஸ்டம்... நாம நாமாவே இருப்பம்’ என்பது. இது மட்டும் இல்லாமல் பொண்ணு ஒருத்தி வாழ்க்கைக்குள் வந்தா அண்ணன் தம்பிகள் ஒண்ணாக இருக்க முடியாது என்பதாலும் அஜித் கல்யாணத்தை வெறுக்கின்றார். இதனால் தம்பிமார்களும் கல்யானத்தை வெறுக்கின்றார்கள். ஆனால் தம்பிகளுக்கு கல்யாண ஆசை ஒரு கட்டத்தில் வர அண்ணன் கல்யாணம் செய்யாமல் தாங்க எப்படி கல்யாணம் செய்வது!!! என்ற குழப்பம். அஜித்தின் நீண்ட நாள் நண்பனான ஒட்டச்சரித்திர ஊரின் கலெட்டரான ‘ரமேஸ் கண்ணாவின்’ உதவியுடன் அஜித்துக்கு சின்ன வயதில் ‘கோப்பெருந்தேவி’ ‘கோபு’ என்ற பெண்ணின் மீது அல்ல அந்த பெயரின் மீது ஒரு ஈடுபாடு இருந்தது தெரியவருகின்றது. அப்போதுதான் தமன்னாவின் அறிமுகம்.
இந்த இடையில் விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் கஜினி பட வில்லன் ‘வீரம்’ படத்தின் முற்பாதியில் வில்லனாக வருகின்றார். இவர்தான் எல்லா அநியாயங்களையும் செய்யும் நாசக்காரன். இவரை அஜித் எதிர்க்கும் காட்சிகளாக இருக்கட்டும், அஜித் தம்பிகள் இவரின் ஆட்களுடன் சண்டை போடும் காட்சிகளாக இருக்கட்டும் சிவா மிரட்டி இருக்காரு. சண்டைன்னா மாஸ்ன்னா எப்ப்படீடீ எடுக்கணும் என்று அவர்கிட்ட படிக்கனும். ‘நா...ம்ம்ம் சொன்னா நாலு பேரும் உன்ன உழுதுடுவானுக..’ என்று அஜித் சொல்லும் போது காதுகள் கிழியுது... என்னமா விசில் அடிக்குறானுக...!!!
தமன்னா படத்தில் சிற்பங்களுக்கு வர்ணம் தீட்டும் கதாப்பாத்திரம். இவரை தம்பிகள் தேடிப்பிடித்து ரமேஸ் கண்ணாவின் உதவியுடன் அவர்களின் ஊரில் உள்ள கோவில் சிலைகளுக்கு வர்ணம் தீட்ட அழைத்து சென்று தங்கள் வீட்டுக்கு பக்கத்தில் குடி வைப்பதில் இருந்து படத்தில் ரொமான்ஸ் ஆரம்பிக்கின்றது! அதில் ஒரு கட்டத்தில் தமன்னாவின் குழு ராமன், சீதை ராமனின் தம்பிகள் இருக்கும் ஒரு சிலைக்கு வர்ணம் தீட்ட முற்படும் போது ஒவ்வொரு சிலையயியும் தனித்தனியாக பிரித்து வேலை செய்தால் இலகுவில் முடித்துவிடலாம் என்று ஒருவர் சொல்ல... ‘இல்லை ராமன் மனைவி தம்பிகள் என்று இருக்கும் இதை வர்ணம் தீட்ட கூட பிரித்து வைத்து தீட்ட கூடாது’ என்று தமன்னா சொல்ல அதை கேட்டுகொண்டிருந்த அஜித்தின் கல் மனதுக்குள் காதல் மெதுவாக வசப்படுகின்றது.
அஜித், தம்ன்னா காதலிக்கின்றார்கள். தமன்னாவின் அப்பாவின் சம்மதம் வாங்குவதற்காக ஊருக்கு செல்கின்றார்கள். அது ஒரு திருவிழா காலம், இப்பதான் படத்தில் முக்கிய திருப்பம். தமன்னாவின் அப்பா நாசர். இவர் ஒரு குட்டி காந்தி போல படத்தில் வருகின்றார். அகிம்சை மட்டும்தான் இவருக்கு பிடிக்கும், சண்டை என்றால் அலர்ஜிக் என்னும் கதாப்பாத்திரம். இவர் அஜித்தை ஏற்பாரா இல்லையா? என்பதும் படத்தின் விறுவிறுப்பை கூட்டுகின்றது. அஜித் ஊருக்கு செற்று அங்கு வரும் பிரச்சனைகள் யாரால் யாருக்கு வரும் பிரச்சனைகள் என்று தெரிந்து தனி ஆளாக வென்று முடிக்கின்றார்.!!! ஊருக்குள் வரும் சண்டையில் அஜித் சொல்லும் வசனங்கள் யாருப்பா அவங்க என்ன கேட்டாங்க? என்று நாசர் அஜித்திடம் கேட்க... ‘சுடுகாட்டுக்கு எப்படி போகனும்ன்னு கேட்டாங்க... நான் அனுப்பி வைத்துட்டன் போய் சேந்திருப்பாங்க’ என்று சொல்லு வசமாக இருக்கட்டும். சின்ன குழந்தையிடம் ‘நீ எட்டு வரைக்கும் எண்ணு நான் எல்லோரையும் காலி பண்ணீடுறன்’ என்றூ சொல்லும் வசனமாக இருக்கட்டும். படத்தின் மிடுக்கிற்க்கு இன்னும் பலம் சேர்த்தது.
படத்தின் பாடல்கள்... அதிலும் முதல் பாடல் மனுஷன் எம்.ஜீ.ஆர் தான்பா என்று பக்கத்த இருக்க அண்ண சொல்லும் அளவுக்கு சர மாரியா இருந்தீச்சூ.. அதில் அஜித் ஆடும் குத்து ஆட்டம் சொல்ல வார்த்தை இல்லை... தல குத்துன்னா குத்துதான்... அடுத்து தங்கமே தங்கமே பாடல்... படத்தில் மெலடிலையும் மிரட்டி இருக்காரு தேவி ஸ்ரீ பிரசாத்... அந்த பாட்டுக்கான காட்சியமைப்புக்கள் சுவிஸ்சில் எடுக்கப்பட்டது இன்னும் இதமாக இருந்தது. படத்தில் ஜிங் ஜிக்கா பாடல் மிகவும் பொருத்தமான இடத்தில் வரும்... நல்ல ஒரு காட்சியமைப்பு... பரவை முனியம்மாவுக்கு ஒரு றீ என்ரிரி... பின்னனி இசை பத்தி சொல்லவே தேவையில்லை... சும்மா அதிருது...
படத்தில் காமடி... சந்தானம் இருக்கின்றார். அதுகும் சிறுத்தை சிவா இயக்கத்தில் என்னும் போது எதிர்பார்ப்பு அதிகமாகியது. சும்மா சொல்ல கூடாதுப்பா... என்னா கெமிஸ்ரி என்னா கெமிஸ்ரி... இது போதாதுன்னு நாசரின் சொந்தகாரராக தம்பி ராமையா... முதல் பாதியில் சந்தானம் ரசிகர்களின் வயிரை சிரிச்சே புண்ணாக்க... இரண்டாம் பாதியில் தம்பி ராமையா பார்த்துகொள்கின்றார். படத்தின் என்ன இல்லை எல்லாம் நிறைந்த ஒரு குடுப்ப படத்தை குறைந்த நாட்களுக்குள் தரமாக எடுத்துக்கொடுத்த சிவாக்கு பெரிய ஒரு கும்பிடு... நீங்க அடித்த மொட்டை வீண் போகல பாஸ்... கீப் ரொக்கிங்...!!! வீரம் கொவிங் டு கிற் த ஸ்கை!!!
“எதிரியா இருந்தாலும் அவ நெஞ்சில குத்தனும்டா...” 7 வருட காத்திருப்புக்கு கிடைத்த பெரிய வெற்றி... தில்லா சொல்லுவேண்டா... வீரம் கெத்துன்னு!!! தீபாவளியும் நமதே பொங்கலும் நமதே...!!!
“வீரம் - அஜித் படத்துக்கு மட்டும் பொருத்தமான தலைப்பு!!!”
நன்றி
விமர்சனம்
யாழ்பாடி
Tags :veeram movie review,veeram movie review,veeram review,veeram,veeram movie,veeram movie online,veeram tamil movoe ,veeram movie online review,Veeram, Veeram, Tamil movie Veeram, Tamil movie Veeram, Veeram release, Veeram release,Ajith, Appukutty, Bala, CRANE MANOHAR, Devadharshini, Elavarasu, Manochithra, Mayilsami, Munish, Nadodigal Abhinaya, Periyardasan, Rameshkanna, Santhanam, Suhail, Tamannah Bhatia, Vidharth, Vidhyulekha Raman ,வீரம் திரை விமர்சனம்,வீரம்
No comments: