Header Ads

யான் திரை விமர்சனம் :

கடந்த வருடம் வெளியான ‘என்றென்றும் புன்னகை’ படத்தைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு ஜீவாவின் நடிப்பில் வெளியாகவிருக்கிறது ‘யான்’ திரைப்படம்.
கோ படத்துக்கு பிறகு நடிகர் ஜீவா வை வைத்து மிகவும் ஸ்டைலிஷாக மிக பெரிய பட்ஜெட்டில் எடுப்பட்ட படம் யான். இப்படத்தை கோ படத்தை எடுத்த தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். அதனால் என்னவோ அப்படத்துக்கு கிடைத்த வெற்றி தாக்கம் இப்படத்தின் மீது சினிமா ரசிகனிடம் இருந்தது.
கதை என்ன?
பாட்டியோட வருமானத்தில காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கிற படித்த வேலையில்லா பட்டதாரி சந்த்ரு. ஏடிஎம்மில் சந்திக்கும் ஸ்ரீலா மீது பார்த்த உடனேயே காதல் வருகிறது. அவர் பின்னாலேயே சுற்றி ஒரு வழியாக அவரது மனதையும் கவர்கிறார்.
ஸ்ரீலாவின் அப்பாவை சந்திக்க வரச் சொல்கிறார்கள். “ஏம்பா… நீ என்ன ஒரு வேலையும் பார்க்காம பாட்டியோட சம்பாத்தியத்தில உட்கார்ந்து சாப்பிடுறியா…?” என்று ஸ்ரீலாவின் அப்பா கேட்டுவிட, சந்த்ருவுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வருகிறது. “யாரைப் பார்த்து என்ன வார்த்தை பேசின… நான் படிச்ச படிப்புக்கு வேலை தேடிட்டு வந்து நிற்கிறேன் பாரு…” என்று ஆவேசமாக சவடால்… சாரி… சவால் விட்டுக் கொண்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
வேலையை தேடுறாரு… தேடுறாரு… ஆனா ஒரு பயலும் வேலை கொடுக்க மாட்டேங்கிறான்… சரி இங்கே இப்படியே இருந்தா சரிவராதுன்னு முடிவு பண்ற சந்த்ரு, வெளிநாட்டுக்கு ஆள் அனுப்புற ஏஜென்ட் மூலமா பெலிக்ஸ்தான் போகிறார். அங்க போய் இறங்கினா… போலீஸ் சந்த்ருவை கைது பண்றாங்க… அவர்களிடம் இருந்து தப்பித்தாரா சந்த்ரு என்பது மீதி கதை.
நடிகர், நடிகைளின் பங்களிப்பு
ஜீவா பார்ப்பதற்கு சாக்லேட் பாய் போன்று அழகாக இருக்கிறார். சண்டை, நடனம், ரொமான்ஸ் என எல்லா ஏரியாவிலும் அதே கல கல ஜீவாதான். குறிப்பாக, தன் காதலியின் நண்பனிடம் ‘மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்...’ எனும் இடம் தியேட்டரில் சிரிப்பலை! துளசி நாயருக்கு அதிக காட்சிகளில் தோன்றும் அளவுக்கு படத்தில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. தம்பி ராமையா, கருணாகரன் ஆகியோருக்கு சீரியஸ் கேரக்டர். ஆனால் சிரிப்பை வரவழைத்திருக்கிறது! மிடுக்கான போலீஸ் அதிகாரியாக வந்துபோகிறார் ஜெயப்பிரகாஷ்.
பலம்
1. படத்தின் ஒளிப்பதிவு மிக நேர்த்தியாகவும், அழகாகவும் தெரிகிறது.
2. படத்தின் பின்னணி சில இடங்களில் நச்.
பலவீனம்
1. பார்த்து பழகி போன காதல் காட்சிகள்
2. மும்பையில் நடக்கும் கதை, பெலிக்ஸ்தானில் நடக்கும் சம்பவங்கள் என சாதாரண ரசிகர்களை விட்டு வெகு தூரத்தில் நடப்பதாக இருக்கிறது படத்தின் கதை
3. போர் அடிக்கும் வைக்கும் திரைக்கதை.
மொத்தத்தில் யான் - சுமார் ரகம்

No comments:

Powered by Blogger.