இது நடிகை நஸ்ரியாவின் ரகசியம்!!
நேரம் நன்றாக இருந்தால், கதாநாயகிகள் கனவுக் கன்னியாவதை தடுக்க முடியாது. நாயகியே நன்றாக இருந்தால், கனவுக் கன்னியாக "நேரம் தடையிருக்காது. அப்படி ஒரு நாயகி தான், "நேரம் படத்தில் அறிமுகமான நஸ்ரியா. "காஷ்மீர் ஆப்பிளுக்கு கால் முளைத்தால், கருப்புத் திராட்சை கண் விழித்தால், ஆரஞ்சுப்பழத்திற்கு உதடு அசைந்தால், "ஸ்ட்ராபெரி சிரிக்க முயன்றால் எப்படி இருக்கும்? அது நஸ்ரியா, என்கிறது, இன்றைய இளைஞர் பட்டாளம்.
இளைஞர் மட்டுமின்றி, இளம்பெண்களின் "பேஸ்புக் பக்கத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும் நாயகிகளில், நஸ்ரியாவுக்கு தான் முதலிடம். ஒரே படத்தில், எந்த நடிகைக்கும் இந்த "ஈர்ப்பு இருந்ததில்லையென்றுதான் சொல்ல வேண்டும்.
No comments: