Header Ads

கோட்டபாய இத்தாலியில் புலிகளின் முக்கியஸ்தரை சந்தித்தாரா ?

சில தினங்களுக்கு முன்னர் இத்தாலி சென்ற கோட்டபாய ராஜபக்ஷ அங்கே ரோம் சென்று பாப்பரசரை சந்தித்த செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்தது. திடீரென அவர் ரோம் செல்லவேண்டிய தேவை ஏன் இருந்தது ? இப்பயணத்திற்கும் இதற்கு சம்பந்தம் இல்லையே என்று பலர் எண்ணியிருப்பார்கள். இச் சந்தேகங்கள் தற்போது உறுதிசெய்யப்படுகிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் ஊடகம் ஒன்று நேற்று வெளியிட்ட செய்தியில், அமெரிக்க புலனாய்வுப் பிரிவினர் கோட்டபாயவின் இத்தாலி விஜயத்தை நோண்ட ஆரம்பித்துள்ளார்கள் எனச் செய்தி வெளியிட்டுள்ளது. காரணம் என்னவென்றால் அவர் அங்கே புலிகளின் சில முக்கியஸ்தர்களை சந்தித்ததாக கூறப்படுகிறது. அமெரிக்க கிரீன் காட் உள்ள , கோட்டபாய அமெரிக்காவால் தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் உறுப்பினர்களை எவ்வாறு சந்திக்க முடியும் ? இது அமெரிக்க சட்டப்படி குற்றம் அல்லவா.

கோட்டபாய இத்தாலி விஜயத்தின்போது, அவர் அங்குள்ள சில தமிழர்களையும் சந்தித்துள்ளார். இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படும் முன் நாள் புலிகளின், சில முக்கியஸ்தர்களை இவர் சந்தித்திருக்க கூடும் என்று இத்தாலி மிலான் மாநிலத்தில் வசிக்கும் சில தமிழர்கள் அதிர்வு இணையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். எது எவ்வாறு இருப்பினும் அமெரிக்கா ஏன் இப் பிரச்சனையை நோண்ட ஆரம்பித்துள்ளது ? அது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. கோட்டபாயவின் கிரீன் காட் பறிபோகுமா ? பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

No comments:

Powered by Blogger.