Header Ads

ஜெனீவா அமர்வு தொடர்பில் தீவிரமான இராஜதந்திர முனைப்புக்களில் இலங்கை

இலங்கை அரசாங்கம், எதிர்வரும் மார்ச்சில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் சபையின் நடவடிக்கைகள் தொடர்பில் தீவிரமான முனைப்புகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்காக தீவிரமான இராஜதந்திர முனைப்புக்களை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் ஒரு கட்டமாக இலங்கை இராணுவத்தினால் 8 காணொளிகள் தயாரிக்கப்பட்டு அவை மனித உரிமைகள் சபைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த காணொளிகளில் போருக்கு பின்னர் இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் பணிகள் காட்டப்பட்டுள்ளதாக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதனை தவிர வெளியுறவு அமைச்சு ஒழுங்கு முறையில் வெளிநாட்டு தூதரங்களுக்கு விளங்கங்களை வழங்கி வருகிறது.

இதற்கிடையில் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளமையால் அது குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக வெளியுறத்துறை அமைச்சின் செயலாளர் அமுனுகம கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Powered by Blogger.