Header Ads

எனக்கே நடிப்பு சொல்லித்தர்றியா? இயக்குனரிடம் சீறிய தனுஷ். படப்பிடிப்பில் பரபரப்பு.

கே.வி.ஆனந்த் இயக்கும் அனேகன் என்ற படத்தில் தனுஷ் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இதன் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்த படத்தை கே.வி.ஆனந்த் ஒவ்வொரு காட்சியையும் மிகவும் கவனமாக எடுத்து வருகிறார். மாற்றான் படத்தோல்விக்கு பின்னர் இந்த படத்தை வெற்றிகரமாக எடுத்தால்தான் கோலிவுட்டில் நிலைத்து நிற்க முடியும் என்பதற்காக மிகவும் கஷ்டப்பட்டு திரைக்கதையை அமைத்துள்ளார். ஒவ்வொரு காட்சியையும் பல டேக்குகள் எடுத்து தனக்கு திருப்தி ஏற்படும் வரை நடிகர்களை பிழிந்து எடுக்கிறாராம்.

இதைப்போலவே தனுஷிடமும் மீண்டும் மீண்டும் காட்சி நல்லபடியாக வரவேண்டும் என்பதற்காக ரீடேக் எடுக்கவேண்டும் என்று கேட்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் தனுஷ் கடுப்பாகி, நான் ஒரு தேசியவிருது வாங்கிய நடிகர், என்னிடமே மீண்டும் மீண்டும் ரீடேக் கேட்பது நன்றாகயில்லை என்று ஆத்திரமாக படப்பிடிப்பில் இருந்து வெளியேறிவிட்டாராம். 

படக்குழுவினர் தனுஷை சமாதானப்படுத்தி பின்னர் நடிக்க வைத்தனர். ஆனால் மீண்டும் ஒருமுறை இதுபோன்ற பிரச்சனை வராது என்று கேரண்டி இல்லை.

No comments:

Powered by Blogger.