Header Ads

கிளிநொச்சி மலையாளபுரத்தில் சிங்களவர்களின் அடாவடி: தமிழ் இளைஞர்கள் பொலிசாரால் கைது.

கிளிநொச்சி மாவட்டத்தில் மலையாளபுரம் என்னும் இடத்தில் பலவந்தமாக குடியேறிய சிங்ளக்குடும்பங்களின் அமைவிடம் அமைந்துள்ள இடத்தின் வளியால் செல்லும் பெண்களை சேட்டைக்குள் உள்ளாக்கும் செயற்பாடுகளில் இறங்கியிருப்பதாக அங்கிருக்கும் மக்கள் கவலை தெரிவிக்கின்றன
இன்று இப்பிரதேசத்தினால் சென்றுகொண்டிருந்த பெண்களை சேட்டைக்குள் இழுத்ததனால் ஆத்திரமடைந்த தமிழ் இளைஞர்கள் தங்களது சகோதரிகளுடன் சேட்டைவிட்டவர்களுடன் சண்டையிட்டதன் காரணமாக இங்கு வந்த பொலீசார் தமிழ்இளைஞர்களை மாத்திரம் கைது செய்து கொண்டு சென்றுள்ளார்கள். 

இதன்பின்னர் அவ்விடத்திற்கு வந்த இலங்கை இராணுவத்தினரும், பொலிசாரும் அங்கு உள்ள தமிழ் பெண்களையும், இளைஞர்களையும் தடிகள் கொண்டு தாக்கிய சம்பவமும் இடம்பெற்றுள்ளது. 

கைது செய்தவர்களை நாளையும், நாளைமறுதினமும் விடுமுறை நாள் என்பதனால் இவர்களை உடனடியாக விடுதலை செய்வதென்பது சாத்தியமில்லாத ஒரு செயற்பாடாகும். அத்தோடு அங்கு சண்டையிட்ட இளைஞர்களில் தமிழ் இனைஞர்களை மாத்திரம் கைது செய்து சென்றது எந்த விதத்தில் ஞாயமானது எனவும் அங்குள்ள மக்கள் கேள்வி எழுப்புகின்றார்கள். 

No comments:

Powered by Blogger.