கற்பழிக்கும்போது கையும் களவுமாக மாட்டிக்கொண்ட இராணுவச் சிப்பாய் !
14 வயதுச் சிறுமியை காட்டுக்குள் அழைத்துச்சென்று கற்பழித்த இலங்கை இராணுவச் சிப்பாய் கையும் களவுமாக மாட்டிக்கொண்டார். கெப்பிட்டிக்கொல்லாவ பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய இராணுவச் சிப்பாய் ஒருவர், விடுமுறையிலிருந்து திரும்பிய நிலையில் தனது இராணுவ முகாமுக்குட்பட்ட(வவுனியா) கிராமத்தை சேர்ந்த 14 வயதுடைய சிறுமியை பிரப்பமடு பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். இதேவேளை எதேட்சையாக அக்காட்டுப் பகுதியில் பொலிசார், ரோந்தில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள். சிறுமியின் கூக்குரல் கேட்டு அவர்கள் குறித்த இடத்திற்கு விரைந்த வேளையே அவர்கள் இராணுவச் சிப்பாயை கைதுசெய்துள்ளார்கள் என்று அதிர்வு இணையம் அறிகிறது. நேற்று மாலை(செவ்வாய்) இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எனினும் இக் கைதுதொடர்பாக சிங்கள மற்றும் இலங்கையில் இருந்துவரும் எந்த ஒரு ஆங்கில இணையமும் செய்தி எதனையும் வெளியிடவே இல்லை. பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ. ஜெயக்கெனடி தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசாரில் ஒருவர் தமிழர் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இராணுவச் சிப்பாய் கைதுசெய்யப்பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதுவே சிங்களப் பொலிசாராக இருந்தால் குற்றவாளி தப்பித்து இருக்க வாய்ப்பு இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

No comments: