2-வது பயிற்சி ஆட்டம்: இங்கிலாந்தை வென்றது இந்தியா
20 ஓவர் உலக கோப்பையின் பயிற்சி ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது இந்தியா.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. வழக்கம் போல தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, ஷிகார் தவான் ஜோடி மீண்டும் சொதப்பியது. இந்திய அணி 38 ரன்களில் முதல் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஆனால் அடுத்து களமிறங்கிய கோலி, ரெய்னா இருவரும் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தனர். இறுதியாக இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. கோலி 74 ரன்களுடனும், தோனி 21 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
179 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணியால் 20 ஓவர்கள் முடிவில் 158 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக மொயிம் அலி 46 ரன்கள் அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

No comments: