Header Ads

வீடுகளில் பாலியல் தொழில் பெண் புரோக்கர்கள் உட்பட 4 பேர் பிடிபட்டனர்

திருவொற்றியூர் : சாத்தங்காடு போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஜோதி நகர் அருகே சென்றபோது, ஒரு பழமையான கட்டிடத்தின் அருகில் ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பேசினர். அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.அதில், மணலி சந்திரசேகர் நகரை சேர்ந்த பாலாஜி (33), பாலியல் புரோக்கர் என்றும், உடன் இருந்த இளம்பெண் ஆந்திராவை சேர்ந்தவர் என்றும் தெரிந்தது. அவரது வீட்டில் சோதனையிட்டபோது ஆந்திராவை சேர்ந்த இளம்பெண் இருந்தார். அவரையும் காவல்நிலையம் கொண்டு வந்தனர்.விசாரணையில், ஆந்திர மாநிலம், சித்தூரை சேர்ந்தவர்கள். இவர்களது குடும்ப வறுமையை அறிந்து, ஒரு தொகையை அவர்களது குடும்பத்தினரிடம் பாலாஜி கொடுத்துள்ளார். பின்னர், அவர்களை மணலியில் உள்ள தனது வீட்டில் வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரிந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜி மற்றும் இளம்பெண்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர், பாலாஜியை சிறையில் அடைத்தனர். இளம்பெண்களை அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.ஆலந்தூர்: மடிப்பாக்கம் கூட்டு ரோடு நேரு தெருவில் வாடகை வீட்டில் வசிப்பவர் லதா (42). இந்த வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக பரங்கிமலை துணை கமிஷனர் சரவணனுக்கு புகார் வந்தது.அவரது உத்தரவின்படி, தனிப்படை போலீஸ்காரர் மாறுவேடத்தில் சென்றார். அங்கு அவரை பாலியல் தொழிலுக்கு அழைத்துள்ளனர்.பின்னர், புரோக்கர்கள் லதா மற்றும் அவரது கூட்டாளிகளான ஆதம்பாக்கம் ரத்தினம் (45), நங்கநல்லூர் லட்சுமி (46) ஆகியோரை கைது செய்யப்பட்டனர்.வீட்டில் இருந்த மதுரவாயல் புளோரா, ஆதனூர் சோபியா ஆகிய 2 இளம்பெண்களை மீட்டனர். 

No comments:

Powered by Blogger.