Header Ads

மிதக்கும் மலேசிய விமானத்தின் பாகங்கள்: தேடும் பணியில் இந்திய, ஆஸி. விமானங்கள்

காணாமல் போன மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள் இந்திய பெருங்கடலில் காணப்படுவதாக ஆஸ்திரேலிய பிரதமரான டோனி அப்பாட் அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதை தேடும் பணிக்காக அந்நாட்டை சேர்ந்த 4 விமானங்கள் அப்பகுதிக்கு விரைந்துள்ளன. விமானத்தின் பாகங்கள் கிடக்கும் இடம் மற்றும் அதன் விவரம் பின்வருமாறு;-

பெர்த்திலிருந்து தென்மேற்காக 2500 கி.மீ தூரத்தில் விமானத்தின் பாகங்கள் மிதக்கின்றன.

24 மீட்டர் நீளமுள்ள மிகப்பெரிய பாகம் மிதக்கும் காட்சி செயற்கைக்கோளில் பதிவாகியுள்ளது. அதுமட்டுமன்றி சில சிறுபாகங்களும் மிதக்கும் நிலையில் காணப்படுகின்றன.

கடலில் மிதக்கும் பாகங்களின் தெளிவான படங்களை எடுக்கும் பணியில் வணிக ரீதியான செயற்கைக்கோள்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே விமானம் பற்றிய உறுதியான தகவல் நாளைக்குள் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.

இதனிடையே இந்திய பாதுகாப்பு படை விமானங்கள் இரண்டும் உடைந்த பாகங்கள் கிடக்கும் பகுதிக்கு விரைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Powered by Blogger.