Header Ads

மாயமான மலேசிய விமானம்: தாய்லாந்து ரேடாரில் பதிவு

பாங்காக்: கடந்த 8-ம் தேதி மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் குறித்த மர்மம் இதுவரை விலகாத நிலையில் தங்களின் ரேடாரில் ஒரு விமானம் பதிவானதாகவும் அது மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானமாக இருக்கலாம் என தாய்லாந்து கூறி உள்ளது. இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறுகையில் அந்த விமானத்தை திரையில் பார்த்தபோது அதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரிவித்தனர்.  விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிந்தவுடன் தான் அது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்ட தொலைவு வரை ரேடாரில் தெரிந்த விமானம் பின்னர் மறைந்துவிட்டது என்றும் அவர்கள் கூறினர்.

No comments:

Powered by Blogger.