Header Ads

ஹன்சிகா படம் டிராப்

ஹன்சிகா நடிக்கும் படம் கைவிடப்பட்டது.தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வருகிறார் ஹன்சிகா. சிம்புவுடன் மலர்ந்த காதலை முறித்துக்கொண்டபின் நடிப்பில் இன்னும் வேகம் காட்டுகிறார். வரும் படங்களை எல்லாம் ஒப்புக்கொள்கிறார். தெலுங்கில் நாக சைதன்யாவுடன் துர்கா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடந்தது. ஸ்ரீனிவாச ரெட்டி இயக்குனர் பொறுப்பு ஏற்றுள்ளார். 

இந்நிலையில் ஹீரோ நாக சைதன்யாவுக்கும், இயக்குனருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கோபம் அடைந்த நாக சைதன்யா, டைரக்டரை மாற்றும்படி தயாரிப்பாளரிடம் கூறினார். இதையடுத்து இப்படம் நிறுத்தி வைக்கப்பட்டது. பிரச்னை முடிவுக்கு வருவதாக இல்லை என்பதால் இப்படத்தை கைவிட தயாரிப்பாளர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 

தமிழில் சிம்புவுடன் வாலு படத்தில் நடித்து வருகிறார் ஹன்சிகா இப்படம் முடிவடையும் தருவாயில் உள்ளது. இப்படத்தின் தொடக்கத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஆனால் இதன் ஷூட்டிங் முடிவதற்குள் காதல் முடிவுக்கு வந்துவிட்டது. ஏற்கனவே சிம்புவுடன் வேட்டை மன்னன் படத்தில் நடிக்க ஹன்சிகா ஒப்புக்கொண்டிருந்தார். அப்படம் கைவிட முடிவு செய்யப்பட்டிருப்பதாக கோலிவுட்டில் கிசு கிசு எழுந்துள்ளது.

No comments:

Powered by Blogger.