மலேசிய விமானியின் வீட்டில் உள்ள சைமுலேட்டரில் தகவல்கள் அழிப்பு
தலைவாசல் >> செய்திகள் >> தலைப்புச்செய்திகள்
மலேசிய விமானியின் வீட்டில் உள்ள சைமுலேட்டரில் தகவல்கள் அழிப்பு
பதிவு செய்த நாள் : புதன்கிழமை, மார்ச் 19, 6:48 PM IST கருத்துக்கள்0வாசிக்கப்பட்டது1 Share/Bookmark printபிரதி
மலேசிய விமானியின் வீட்டில் உள்ள சைமுலேட்டரில் தகவல்கள் அழிப்பு
கோலாலம்பூர், மார்ச் 19-
மலேசியன் ஏர்லைன்ஸை சேர்ந்த விமானம் கடந்த 8ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து சீனா சென்றபோது காணாமல் போனது. நாளுக்கு நாள் அது குறித்து வெளிவரும் தகவல்கள் மேலும் மேலும் குழப்பத்தை தான் ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் இன்றும் ஒரு குழப்பமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி இந்த விமானத்தின் விமானியான ஜஹாரி அகமது ஷா வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சைமுலேட்டரில் பல்வேறு தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தகவலை மீட்டெடுக்க விமானத்துறை வல்லுனர்கள் முயன்று வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 3-ந் தேதி அந்த சைமுலேட்டரில் இருந்த தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து துறை அமைச்சரான ஹிசாமுதின் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
தற்போது வரை பைலட் உள்பட அதில் பயணம் செய்த 239 பயணிகளும் அப்பாவிகள் என்று தான் கருதுவதாகவும், அவர்கள் தவறு செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டால் தான் அவர்கள் குற்றம் புரிந்ததாக கருதப்படுவார்கள் எனவும் ஹுசைன் மேலும் தெரிவித்தார். அதே போல விமானத்தில் பயணம் செய்த இரு விமானிகளும் தங்களது கேபினில் பேசியதை மலேசிய அதிகாரிகள் ஆராய்ந்ததாகவும் ஆனால் சந்தேகப்படும்படியான எவ்வித உரையாடலும் நடக்கவில்லை என்று தெரியவந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
எப்படியோ ஜோசியம் பார்த்தாவது சீக்கிரம் விமானத்தை கண்டுபிடிங்கப்பா என்பதே அனைவரின் குரலாக இருக்கிறது.

No comments: