Header Ads

நறுக் சுருக் சினிமா செய்திகள் !

மரியான்’ பார்வதி கமலுடன் 'உத்தம வில்லன்’ படத்தில் நடிக்கிறார். காஜல் அகர்வால் கேட்ட சம்பளத்தால்தான் அவரின் வாய்ப்பு பறிபோனதாம். ரமேஷ் அரவிந்த் இயக்குவதால், கன்னடத்தில் நேரடிப் படமாக வெளியாகிறது. தமிழ்-தெலுங்கு- கன்னடம் என மூன்று மொழிகளில் ரிலீஸ் ஆகிறது 'உத்தம வில்லன்’. வீ ஆர் வெயிட்டிங்!



* ஸ்ரீதிவ்யா முதன்முதலில் நடித்து, இன்னும் வெளிவராத படம் 'காட்டு மல்லி’.  ஆனால் ஸ்ரீதிவ்யாவுக்கு முன்பு ஒப்பந்தம் செய்யப்பட்டது, ஸ்ரீதிவ்யாவின் அக்கா ஸ்ரீரம்யாதான்.  என்ன காரணத்தாலோ இறுதியில் ஸ்ரீதிவ்யாவை ஒப்பந்தம் செய்துவிட்டனர். தான் நடிக்க வேண்டிய படத்தில் திவ்யா நடித்ததால், அக்கா - தங்கைக்குள் பேச்சு வார்த்தை இல்லையாம். வராத படத்துக்கே இப்படியா?

No comments:

Powered by Blogger.