Header Ads

ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா

கிரிமியா ரஷ்யாவுடன் இணைந்ததை அடுத்து மேற்கத்திய நாடுகள் அதற்கெதிராக தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றன. இதன் அடுத்த கட்டமாக  ரஷ்யா மீது  பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. 

இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கூறுகையில், “ரஷ்யாவின் மீது உள்நாட்டு அடிப்படையிலும் வெளிநாட்டு அடிப்படையிலும்  பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் முக்கிய துறைகள் மீது இன்னும் சில தடைகள் விதிக்கப்பட உள்ளன. மேலும் இப்பொருளாதார தடைகளால் ரஷ்யாவின் பொருளாதாரம் பெரிதும் பாதிப்படும் என்று தெரிவித்தார்.

No comments:

Powered by Blogger.