விஜய்யுடன் ஜோடி சேர இலியானா முயற்சி
இலியானா தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். தமிழில் ‘கேடி’ படம் மூலம் அறிமுகமானார். இரு வருடங்களுக்கு முன் ரிலீசான நண்பன் படத்தில் விஜய் ஜோடியாக நடித்தார். அதன் பிறகு அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் வர வில்லை. தற்போது இந்தி படங்களில் நடிக்கிறார்.
இந்த நிலையில் விஜய்யுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க இலியானா முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். இதில் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படத்துக்கு பிறகு சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தில்தான் விஜய் ஜோடியாக நடிக்க இலியானா விரும்புகிறார். இதற்காக டைரக்டருக்கு தூது அனுப்பி உள்ளாராம்.
இந்த படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். ஒரு நாயகியாக பிரியங்கா சோப்ராவை ஏற்கனவே முடிவு செய்துள்ளனர்.

No comments: