சினிமாவை விட்டு விலகுகிறேன்: ரம்யா
குத்து’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரம்யா. ‘கிரி’, ‘பொல்லாதவன்’, ‘வாரணம் ஆயிரம்’, ‘சிங்கம்புலி’ ஆகிய படங்களில் நடித்தார். கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருந்தார்.
கடந்த 2011–ல் ரம்யா இளைஞர் காங்கிரசில் இணைந்தார். 2014–ல் கர்நாடக மாநிலம் மாண்டியா பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டார். இதில் 47 ஆயிரத்து 622 வாக்குகள் பெற்று எம்.பி.யாக தேர்வானார். இதையடுத்து படங்களில் நடிப்பதை நிறுத்தினார்.
கன்னடத்தில் அவர் நடித்து பாதியில் நின்ற படங்களை முடித்து தரவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டன. இதையடுத்து அவற்றில் நடித்து முடித்தார். இனிமேல் நடிப்பதில்லை என்று முடிவு எடுத்து உள்ளார்.
இதுகுறித்து ரம்யா அளித்த பேட்டி வருமாறு:–
என்னை மக்கள் எம்.பி.யாக தேர்வு செய்துள்ளனர். நான் வெற்றி பெற்ற தொகுதி மக்களுக்கு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது. இதனால் சினிமாவில் தொடர்ந்து நடிப்பது சிரமமாக இருக்கிறது. எனவே இனிமேல் நடிப்பதில்லை என்று முடிவு செய்து விட்டேன்.
இனிமேல் கதாநாயகியாக நடிக்க மாட்டேன். ஒருவேளை வயதான பிறகு மீண்டும் சினிமாவுக்கு வரலாம். இப்போது என் முழு பணியும் அரசியல்தான். ரசிகர்கள் எனது அரசியல் வாழ்க்கைக்கும் ஆதரவு தரவேண்டும்.
இவ்வாறு ரம்யா கூறினார்.

No comments: