கூட்டணிக்கு வராவிட்டால் கவலை இல்லை: விஜயகாந்த் மீது சந்திரசேகர் தாக்கு
தி.மு.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் கூடுவாஞ்சேரியில் நடந்தது. கே.பி.ஜார்ஜ் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் நடிகர் சந் திரசேகர் கலந்து கொண்டு பேசியதாவது:–
வருகின்ற நாடளுமன்ற தேர்தலிலும் சரி, சட்டமன்ற தேர்தலிலும் சரி மீண்டும் திமுக ஆட்சி தான் மலர போகிறது. இந்தியாவிலேயே 90வயதிலும் இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே தலைவர் கலைஞர் மட்டும் தான். அண்ணா பிறந்த மண்ணில் காஞ்சிபுரத்தில் பிரசாரம் தொடங்கிய ஜெயலலிதா.
முதலில் அண்ணா இல்லத்திற்கு சென்று மாலை அணிவத்து விட்டு பிரசாரத்தை தொடங்க மறந்து விட்டார். அ.தி.மு.க. கொடியில் அண்ணாவின் படத்தை வைத்திருக்கும் ஜெயலலிதா அண்ணாவை மறந்து விட்டார்.
கலைஞர் யாரை விரல் நீட்டி பிரதமர், ஜனாதிபதி என்கிறாரோ அவர் தான் பிரதமர், ஜனாதிபதியாக முடியும். இப்போது கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் பேரம் பேசிக்கொண்டு கட்சியை தொழிலாக செய்து வருகிறார்கள். மக்களுக்கு தொண்டு செய்வதில்லை.
சினிமாவில் நடித்தவர் இன்று அரசியல் கட்சியை ஆரம்பித்து விட்டு நான் தான் முதல்–அமைச்சர், பிரதமர், ஜனாதிபதி என்கிறார். 50–வயதில் சினிமா மார்க்கெட்டை இழந்த பிறகு அரசியலுக்கு வருகிறார்கள்.
இனி அவர்கள் தி.மு.க. கூட்டணிக்கு வந்தாலும், வராவிட்டாலும் கவலையில்லை. 40–ம் நமக்கு தான் என்ற சூழ்நிலை நிலவி வருகிறது. மேடை ஏறி பேசினால் மட்டும் போதாது. கொள்கை வேண்டும். தமிழன் என்ற உணர்வு இருக்க வேண்டும்.
இதையெல்லாம் தா. பாண்டியனும், வைகோவும் மறந்து விட்டு தேர்தலில் சீட்டுக்காக அல்லல் பட்டும், கெஞ்சியும், மெளனமாகவும் இருக்கிறார்கள். பழத்துக்காக 2 பேர் மரத்தடியில் படுத்திருக்கிறார்கள்.
உலகத்திலேயே தோற்காத ஒரே சட்டமன்ற உறுப்பினர் கலைஞர் மட்டும்தான். டெசோ மாநாடு நடத்தி ஐநா சபையே திரும்பி பார்க்க வைத்தவர் கலைஞர். பொறுத்திருந்து பாருங்கள் வருகின்ற தேர்தலில் யார் வெல்ல போவது என்று.
இவ்வாறு அவர் பேசினார்.

No comments: