லண்டனில் சமந்தா சிகிச்சை
சமந்தா லண்டனில் ரகசிய சிகிச்சை எடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.நான் ஈ படத்துக்கு பிறகு சமந்தாவுக்கு பட வாய்ப்பு குவியத் தொடங்கியது. இந்நிலையில் தோல் நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் மணிரத்னம், ஷங்கர் படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை நழுவவிட்டார். சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தவர் சூர்யாவுடன் அஞ்சான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். அதேபோல் முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கிறார். அஜீத் ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளிவருகிறது.
அஞ்சான் பட ஷூட்டிங் மும்பையில் நடந்தபோது மீண்டும் தோல் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனை ஒன்றில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டு ஷூட்டிங்கில் பங்கேற்றார். சமீபத்தில் மீண்டும் சில நாட்கள் ஷூட்டிங்கில் விடுமுறை எடுத்துக்கொண்டு லண்டன் பறந்தார். அங்குள்ள பிரபல மருத்துவமனையில் அவர் ரகசிய சிகிச்சை எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் சமந்தா. சோப்பு, ஆயில் விளம்பரங்களில் நடித்தார். இதையடுத்து பெண்களுக்கான பிரத்யேக செருப்பு விளம்பரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். லண்டன் புறப்படுவதற்கு முன் ரபாஷா தெலுங்கு பட ஷூட்டிங்கில் சில நாட்கள் பங்கேற்று நடித்தார். விரைவில் அஞ்சான் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.

No comments: