Header Ads

பெரிய நடிகர்கள், பெரிய டெக்னீஷியன்கள் தேவையில்லை - சந்தானம் அதிரடி!!

பெரிய ஹீரோக்கள், பெரிய இயக்குநர்கள் யாரும் எனக்கு தேவையில்லை, நான் என்னை மட்டுமே நம்பி இருக்கிறேன் என்று நடிகர் சந்தானம் அதிரடியாக பேசினார். தமிழ் சினிமாவின் நம்பர்-1 காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சந்தானம் முதன்முறையாக தனி ஹீரோவாக களம் இறங்கியுள்ள படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சந்தானம் பேசிய பேச்சு அதிரடியாக இருந்தது.

விழாவில் அவர் பேசியதாவது, எவ்வளவு நாளைக்குத்தான் நானும் காமெடியனாகவே நடிக்கிறது, அதான் ஹீரோவாக களம் இறங்கிவிட்டேன். எனக்குன்னு ஒரு மார்க்கெட் வேல்யூ வேண்டும் என்று இத்தனை நாள் காத்திருந்தேன். அது இப்போது கிடைத்துவிட்டது. என் நண்பர்கள், ரசிகர்கள் எல்லோரும் என்னை ஹீரோவாக நடியுங்கள் என்று வற்புறுத்தினார்கள். அதன்படி இந்தப்படத்தின் கதை பிடித்து போக, இதுதான் சமயம் என்று ஹீரோவாக களம் இறங்கிவிட்டேன்.

இந்தப்படத்தின் இயக்குநர் ஸ்ரீநாத் என் நண்பர் தான். அவர் எனக்கான ஹீரோயின் எப்படி வேண்டும் என கேட்டபோது எனக்கு அனுஷ்கா மாதிரி வேணும், ஐஸ்வர்யா ராய் மாதிரி வேணும் என்றெல்லாம் கேட்கவில்லை, எனக்கு ஏற்றபடி ஒரு ஹீரோயின் பார் என்று தான் சொன்னேன் என்றார். மேலும் இந்தப்படத்துக்காக 3 மாதம் டான்ஸ் பயிற்சி எல்லாம் எடுத்து நடித்தேன்.

இந்தப்படத்தை நான் யாரையும் நம்பி எடுக்கவில்லை. முழுக்க முழுக்க என்னை மட்டுமே நம்பி இறங்கியிருக்கிறேன். எனக்கு பெரிய பெரிய ஹீரோக்கள், ஹீரோயின்கள், டெக்னீஷியன்கள் எல்லாம் தேவையில்லை, இந்த விழாவுக்கு கூட முன்னணியில் இருக்கும் ஹீரோ, இயக்குநர்களை நான் கூப்பிடவில்லை, எனக்கு நல்லது செய்யணும்னு நினைக்கிற நல்ல இதயங்கள் படைத்தவர்கள் மட்டும் என்னுடன் இருந்தால் போதும் என்றார்.

விழாவுக்கு வந்திருந்த இயக்குநர் ராஜமெளலி, நடிகர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் சந்தானத்தையும், அவரது படத்தையும் வெற்றி பெற வேண்டி வாழ்த்தினர்.

No comments:

Powered by Blogger.