மும்பை பந்த்ரா பகுதியில் காதலருடன் உணவு விடுதியில் சுற்றி திரிந்த தீபிகா படுகொனே
பாலிவுட் திரைப்பட நடிகர்களான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகொனே ஆகியோர் ஒன்றாக சுற்றி திரிவதாக செய்திகள் வெளிவந்து கொண்டு இருந்தாலும் அதனை இருவரும் மறுத்து வந்தனர்.
இந்நிலையில், மும்பை பந்த்ரா பகுதியில் கடந்த ஞாயிற்று கிழமை இரவு விடுதி ஒன்றில் இருந்து இருவரும் ஒன்றாக வெளியேறியுள்ளனர். இருவரும் வெள்ளை நிற டி சர்ட்டுகள் மற்றும் நீல நிற ஜீன்ஸ் பேண்ட் என ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்திருந்தனர். இருவரும் இணைந்து சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் உருவாகும் பாஜி ராவ் மஸ்தானி திரைப்படத்தில் நடிக்க உள்ளனர்.
இருவரும் அவரது இயக்கத்தில், கோலியான் கீ ராஸ்லீலா ராம் லீலா என்ற படத்தில் நடித்துள்ளனர். அதன் பின்னர் இருவரும் பல சமயங்களில் சில உயர் தர உணவு விடுதிகளில் ஒன்றாக பொழுதை கழித்துள்ளனர். எனினும் இவற்றையெல்லாம் புரளிகள் என மறுத்த தீபிகா படுகொனே, தனக்கு ஒரு நல்ல நண்பர் ரன்வீர் என்பதை தவிர வேறெதனையும் கூறியதில்லை.
ஆனால், நேற்று முன் தினம் இரவு உணவு விடுதியில் இருந்து ஒன்றாக வெளியேறிய தீபிகா மற்றும் ரன்வீர் ஆகிய இருவரையும் புகைப்படம் எடுக்க புகைப்படக்காரர்கள் முயன்றபோது, தீபிகா தனது முகத்தை நேரடியாக காட்டுவதற்கு விருப்பமில்லாமல் வேறு பக்கம் திருப்பி கொண்டார். ஆனால் இது எதனையும் பொருட்படுத்தாமல் கிரே நிற தொப்பி அணிந்த ரன்வீர் சிரித்தபடியே சென்றார்.

No comments: