Header Ads

துபாயில் விற்பதற்காக சிறுமியை மணந்த அரபு ஷேக் கைது: 12 தரகர்கள் சிக்கினர்

திருமலை: துபாய் லாட்ஜ்களில் விற்பதற்காக  ஐதராபாத்தில் சிறுமியை திருமணம் செய்த அரபு நாட்டு ஷேக்  கைது செய்யப்பட்டார். ரோமன் நாட்டை சேர்ந்தவர் ஷேக் (60).  இவர் பெற்றோரை இடைத்தரகர்கள் மூலம் அணுகி பண  ஆசைக்காட்டி சிறுமிகளை திருமணம் செய்து துபாயில் உள்ள  பல்வேறு லாட்ஜ்களில் விற்று வருவதை வழக்கமாக  கொண்டுள்ளார். ஐதராபாத் ஓல்டு சிட்டி பகுதியை சேர்ந்த 14  வயது சிறுமியை சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்த  ஷேக், அதே பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் அடைத்து  கொடுமைபடுத்தி வந்தார். 

அந்த சிறுமி நேற்று முன்தினம் அங்கிருந்து தப்பி, ஐதராபாத்  பவானி நகர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து போலீசாரிடம்  நடந்தவற்றை கண்ணீர் மல்க கொட்டித்தீர்த்தார். உடனடியாக  களமிறங்கிய தனிப்படை போலீசார், ஷேக்கை கைது செய்தனர்.  அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த அசன் நகரை சேர்ந்த 14  வயது சிறுமியை மீட்டனர்.  
போலீசார் அவர்கள் பாணியில் ஷேக்கிடம் நடத்திய  விசாரணையில், இடைத்தரகர் ரபீக்பீன் கைது செய்தனர். 

மேலும், ரபீக்பீன்னிடம் நடத்திய விசாரணையில், 5 பெண்கள், 6  ஆண்கள் இடைத்தரகர்களாக செயல்பட்டது தெரிய வந்தது.  போலீசார் அவர்களையும் கைது செய்தனர். மேலும்  விசாரணையில் ஷேக், இதுபோல் பல சிறுமிகளை கடத்தி  வெளிநாடுகளில் விற்றது அம்பலமாகி யுள்ளது.

No comments:

Powered by Blogger.