Header Ads

உல்லாசத்துக்கு மறுத்த டாக்சி டிரைவருக்கு கத்திக் குத்து: ரோமானிய அழகிக்கு 4 ஆண்டு சிறை

மத்திய ஐரோப்பியாவை சேர்ந்த ரோமானிய நாட்டிலுள்ள டுல்கியா நகரில் வசிக்கும் 31 வயது பெண், லுமினிடா பெரிஜோக். 

ஒரு சாயலில் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி போலவே தோற்றமளிக்கும் இவர், தனது அழகால் எல்லா ஆண்களையும் மயக்கிவிட முடியும் என்ற எண்ணத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவராக வலம் வந்தார். 

அதே நம்பிக்கையுடன், தான் விரும்பிய ஆண்களுடன் உல்லாசமாக சல்லாபித்து வந்த இவரது பார்வையில் டாக்சி டிரைவரான நிக்கோலே ஸ்டான் என்பவர் பட்டார். அவரையும் அடைந்துவிட நினைத்த லுமினிடா பெரிஜோக் தனது அழகு, கவர்ச்சி ஆகிய அஸ்திரங்களை அவர் மீது பிரயோகித்தார். 

ஆனால், ஏகப்பத்தினி விரதனாக இருந்த டாக்சி டிரைவரிடம் இந்த அஸ்திரங்கள் பலனளிக்காமல் முனை முறிந்து திரும்பி வந்ததை கண்டு வெறுப்படைந்த லுமினிடா பெரிஜோக், அந்த டாக்சி டிரைவரை கத்தியால் குத்திக் கொல்ல முயன்றார். 

உடலின் 6 இடங்களில் கத்திக் குத்து காயங்களுடன் உயிர் பிழைத்த நிக்கோலே ஸ்டான், இச்சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது ‘பிளேட்டை மாற்றிப் போட்ட’ லுமினிடா பெரிஜோக், தன்னை கற்பழிக்க வந்த டாக்சி டிரைவரிடமிருந்து தப்பிக்கும் நோக்கத்தில் கத்தியால் குத்தியதாக கூறியும், அதற்கான ஆதாரம் இல்லாததால் அந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். 

அதிகப்படியான மருந்துகளை சாப்பிட்டதால் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இந்த தவறு நடந்து விட்டது என்று கூறி சமீபத்தில் லுமினிடா பெரிஜோக் தாக்கல் செய்த மருத்துவ ஆவணங்களின் அடிப்படையில் தண்டனை காலத்தில் ஓராண்டினைக் குறைத்த நீதிபதி, நான்காண்டு சிறை தண்டனையாக்கி உத்தரவிட்டார்.

No comments:

Powered by Blogger.