200 கிலோ இளைஞனாக அல்லரி நரேஷ்!
தமிழில் சூர்யாவும், விக்ரமும் விதவிதமான கெட்அப்களில் நடிப்பது போன்று தெலுங்கு ஹீரோக்களுக்கும் அந்த ஆசை வந்திருக்கிறது. இளம் ஹீரோ அல்லரி நரேஷ் லட்டு பாபு என்ற படத்தில் 200 கிலோ எடையுள்ள இளைஞராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூமிகாவும், பூர்ணாவும் நடித்திருக்கிறார்கள். ரவி பாபு இயக்கி உள்ளார்.
ஹார்மோன் கோளாறால் குண்டாகிப்போன ஒரு இளைஞனின் வலியை காமெடியாக சொல்கிற படமாம். பெற்றவர்கள் உள்ளிட்ட அனைவரும் வெறுக்கும் அவரையும் ஒரு பெண் நேசிப்பதாக கதை செல்லும்.
குண்டு இளைஞர் மேக்அப் போட 6 மணிநேரம் ஆகுமாம். அதே மேக்அப்பை கலைக்க 3 மணிநேரம் ஆகுமாம். அண்மையில் நடந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நரேஷ் குண்டு மனிதன் கெட்டப்பிலேயே வந்து பார்வையாளர்களை அசத்தினார்.
"இந்தப் படத்திற்காக நிறைய சிரமங்களை அனுபவித்தேன். இந்த படம் என்னோட கேரியரில் முக்கியமான படமாக இருக்கும். சந்தோஷமா உணர்கிறேன்" என்று கூறியிருக்கிறார் நரேஷ்.

No comments: