பேஸ்புக் மூலம் இளம்பெண் என ஏமாற்றிய 45 வயது பெண் சுட்டுக்கொலை: இளைஞர்களே உஷார்
உத்தரப்பிரதேசத்தில் உள்ள முசாபர்பூரை சேர்ந்த 22 வயதான இளைஞனான வினித் சிங் தன்னை பேஸ்புக் மூலம் இளம்பெண் எனக் கூறி ஏமாற்றிய வயது முதிர்ந்த பெண்ணான ஜோதி கோரியை சுட்டுக்கொன்றார். தனது பேஸ்புக் சுய விவர பக்கத்தில் நடிகையின் படத்தை வைத்திருந்த அப்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமானது தெரிய வந்தது. ஆத்திரமடைந்த அந்த இளைஞன் அப்பெண்ணை சுட்டுக்கொன்றதுடன் தானும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். துப்பாக்கியால் சுட்டுகொண்ட நிலையில் மருத்தவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இளைஞன் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
தனக்கு 21 வயது என்று கூறிய அப்பெண் 45 வயதானவர் என்பதுடன் மூன்று குழந்தைகளுக்கு தாய் என தெரிந்ததும் அந்த இளைஞன் கடும் அதிர்ச்சியடைந்துள்ளான். வேலையில்லாத இளைஞனான வினித்துக்கும் குடும்ப வாழ்க்கையில் கடுப்பாகிப்போன அப்பெண்ணுக்கும் கடந்த 3 வருடங்களாக வலைதள தொடர்பு இருந்துள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளரான ஹரிநாராயணாச்சாரி மிஸ்ரா கூறினார்.
நீர் பாசன துறையில் வேலை செய்துவரும் அப்பெண்ணின் கணவருக்கும், அப்பெண்ணின் 21 வயது மூத்த மகளுக்கும் கூட தனது தாய் என்ன செய்கிறார் என்பது தெரியவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வினித் தன்னை அப்பெண் இருட்டில் வைத்து ஏமாற்றியதாக தொடரந்து உளறி வந்ததாக அந்த அதிகாரி கூறியுள்ளார்.
இச்சம்பவம் மூலம் இளைஞர்கள் அனைவரும் பேஸ்புக் சாட்டிங்கில் கவனமாக இருக்குவேண்டும் என தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments: