5 மற்றும் 7 வயது சகோதரிகளை 3 நாட்கள் கற்பழித்த 2 வாலிபர்கள் கைது
மும்பை பாந்துப்ரெயில்வே நிலையம் அருகே சாலை அமைக்கும் பணிக்கு இடம் கையகப்படுத்தபட்டதால் ஒரு குடும்பம் தங்களது வீட்டை இழந்தது. இதனால் அவர்கள்
தங்கள் சொந்த ஊரான ரத்தினகிரிக்கு செல்ல எண்ணிணர் அதற்காக பாந்துப்ரெயில்வே நிலையத்தில் தங்கி இருந்தனர். தங்கள் 5 மற்றும் 7 வயது உள்ள பெண் குழந்தைகளை அருகில் போட்டு ரெயில்வே நிலையத்திலேயே தூங்கினர்.
இந்த நிலையில் 5 வயது பெண் குழந்தைக்கு திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கபட்டது அப்போது டாகடர்கள் அந்த சிறுமியை சோதனை செய்த போது அந்த சிறுமி கற்பழிக்கபட்டு உள்ளது தெரியவந்தது. இது குறித்து சிறுமியிடம் விசாரித்த போது அவள் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு உள்ளார். இது குறித்து குர்லா ரெயில்வே போலீசில் புகார் செய்யபட்டது. உடனடியாக போலீசார் அந்த பகுதியில் சுற்றி திரிந்த 19 மற்றும் 21 வயது உடைய 2 வாலிபர்களை கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறும் போது:-
வாலிபர்கள் இருவரும் ரெயில்வே நிலையத்திலேயே சுற்றி திரிந்து உள்ளனர் அப்போது சிறுமிகள் தனியாக இருக்கும் நேரம் பார்த்து அவர்களை அழைத்து கொண்டு அருகில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு சென்று அங்கு வைத்து சிறுமிகளை கற்பழித்து உள்ளனர். இந்த கற்பழிப்பு சம்பவம் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்று உள்ளது.அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 376, 363, மற்றும் 34 கீழ் அவழக்குப்பதிவு செய்யபட்டு உள்ளது என கூறினர்.

No comments: