Header Ads

சவுதியில் நடந்த சாலை விபத்தில் 5 இந்தியர்கள் பலி

சவுதிய அரேபியாவில் இந்தியர்கள் பயணம் செய்த வேன் ஒன்று விபத்துக்குள் சிக்கியதில் 5 பேர் பலியாகினர்.

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவ 6 பேர் அங்குள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளனர். அவர்கள் வேன் மூலம் ரியாத் சென்றுள்ளனர். அவர்களது வேன் ரிதுன் என்ற இடத்தில் நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென வேன் டயர் வெடித்து கவிழந்தது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த கேரள மாநிலத்தை சேர்ந்த சலீம்(32) நவாஸ் (26), நவ்ஷாத்(26), ஸ்ரீதரன் (35) மற்றும் ஜெனார்த்தனன்(40) ஆகியோர் பலியானார்கள். மேலும், மலப்புரத்தை சேர்ந்த ஒருவரும், வங்காள தேசத்தை சேர்ந்த ஒருவரும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானவர்கள் உடலும் தாய்ப்பில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.