பேருந்துக்குள் சிறுமி பாலியல் பலாத்காரம்: 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!
போபால்: மத்திய பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் சிங்ராவ்லி மாவட்டம் நலதானி என்ற இடத்தில் சிறுமி ஒருவர் தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது, அந்த வழியாக வந்த தனியார் பேருந்தில் இருந்தவர்கள், சித்திக் பகுதியில் இறங்கிவிடுவதாக கூறி பேருந்தில் சிறுமியை ஏறுமாறு கூறியிருக்கின்றனர். அந்த சிறுமியும் அதை நம்பி பேருந்தில் ஏறியிருக்கிறார்.
அந்த பேருந்தில் ஒரு டிரைவர் 2 கிளினர் உள்பட 5 பேர் இருந்துள்ளனர். பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில், பேருந்தில் இருந்த 5 பேரும் சிறுமியை பலவந்தமாக பலாத்காரம் செய்துள்ளனர். இதில் அதிர்ச்சியடைந்த அந்த சிறமி அலறியுள்ளார். அப்போது அந்த கும்பல், சிறுமியின் அலறல் சத்தம் வெளியே கேட்காமல் இருப்பதற்காக பேருந்தின் ஜன்ன்ல்களை மூடிவிட்டு பேருந்தை ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதிக்கு ஓட்டிச் சென்றுள்ளனர்..
அங்கு பேருந்தில் இருந்த 5 பேரும் சிறுமியை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், மீண்டும் பேருந்தில் அந்த சிறுமியை ஏற்றிக் கொண்டு, ஊர் எல்லை வந்ததும் ஓடும் பேருந்தில் இருந்து வெளியே தள்ளி விட்டுள்ளனர். இதில், பலத்தக் காயமடைந்த அந்த சிறுமி, ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனை கண்ட நல்கதானி கிராமத்தினர் அந்த சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நடத்திய முதற்கட்ட விசாரணையில், அநத் பேருந்து உள்ளூர் வியாபரி ஒருவரின் திருமண வீட்டிற்கு சென்று கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் ஒருவனை போலீசார் கைது செய்து அவனிடம் தொடர்ந்து விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.
.jpg)
No comments: