Header Ads

இயக்குநர் விஜய் - அமலாபால் திருமணத் தேதி?

இயக்குநர் விஜய், அமலாபால் காதல் விவகாராம் இப்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. போன் பில் மூலமாகத் தான் எனக்குத் தெரிந்தது என அமலாபாலின் அம்மா சமீபத்தில் கூறினார்.

''தம்பி காதல் விவகாரம் எங்களுக்கு முன்னாலேயே தெரியும். எங்கள் வீட்டில் முதன் முதலில் காதல் திருமணம் செய்யப்போவது அவன் தான்'' என இயக்குநர் விஜய்யின் அண்ணனும் நடிகருமான உதயா தெரிவித்திருந்தார்.



இந்நிலையில் இது பற்றி மேலும் ஒரு தகவல் வெளிவந்துள்ளது. ஜூன் 7ம் தேதி கொச்சினில் விஜய் - அமலா பாலின் நிச்சயதார்த்தம் நடக்கப் போவதாகவும், 12ம் தேதி சென்னையில் இவர்களின் திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் இது பற்றி உறுதியான தகவல் விஜய் - அமலாபால் தரப்பிலிருந்தே வரும் என எதிர்பார்க்கலாம்.

No comments:

Powered by Blogger.