அஜீத் - கெளதம் மேனன் படம் துவங்கியது! கெளதம் மேனன், அஜீத்துடன் இணையும் புதிய படத்தின் பூஜை இன்று(ஏப்ரல் 9ம் தேதி) துவங்கியது. ... மேலும் படிக்க
கெளதம் மேனன், அஜீத்துடன் இணையும் புதிய படத்தின் பூஜை இன்று(ஏப்ரல் 9ம் தேதி) துவங்கியது. ஆரம்பம், வீரம் படங்களின் வெற்றிக்கு பிறகு அஜீத், கெளதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அஜீத் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் ஹீரோயினாக அனுஷ்கா ஒப்பந்தமாகியுள்ளார். இதுதவிர இன்னொரு நாயகியும் நடிக்க இருக்கிறார்.
இப்படத்திற்காக அஜீத், தனது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார். ஏற்கனவே ஆரம்பம் படத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னமே இப்படத்தையும் தயாரிக்கிறார். கெளதம் மேனனின் சமீபத்திய சில படங்கள் தோல்வியை சந்தித்ததால், இந்தப்படத்தை எப்படியேனும் ஹிட் படமாக கொடுக்க கடுமையாக உழைத்து வருகிறார் கெளதம் மேனன்.
இந்நிலையில், இப்படத்தின் பூஜை, சென்னை வளரசவாக்கத்தில் உள்ள ஏ.எம்.ரத்னத்தின், பாபா கோயிலில் இன்று சிறப்பாக நடந்தது. இயக்குநர் கெளதம் மேனன், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் உள்ளிட்டோர் படத்தின் பூஜையில் பங்கேற்றனர். படத்தின் முதல்காட்சியாக பாபாவை படமாக்கினர். வருகிற 11ம் தேதி முதல் படத்தின் ஷூட்டிங் நடைபெறுகிறது. இதில் படத்தின் ஹீரோ அஜீத் பங்கேற்க உள்ளார்.

No comments: