அஞ்சான்’ படத்தில் பாட்டெழுதினால் அது என் இனத்துக்கு செய்யும் துரோகம் : லிங்குசாமியை அதிர வைத்த பாடலாசிரியர்!
வார்த்தைக்கு வார்த்தை தமிழ் தமிழ் என்று மேடைக்கு மேடை முழங்குபவர்கள் எல்லாரும் நிஜ வாழ்க்கையில் அப்படி இருப்பதில்லை ஆனால் கவிஞர் அறிவுமதி அப்படியல்ல. தமிழ்சினிமாவில் தன்மானக்கவிஞர் என்ற சொல்லுக்கு 100 சதவீதம் பொருத்தமானவர் அறிவுமதி தான்.
மற்ற கவிஞர்களைப் போல அவர் காசுக்கு ஆசைப்பட்டு பாடல் எழுதுவது இல்லை. ஒரு பாடலில் ஒரு வார்த்தை ஆபாசமாக இருந்தாலும் கூட அந்தப்பாடல் வாய்ப்பை தூர தூக்கி எறிந்து விடுவார். அப்படிப்பட்ட அவர் தான் லிங்குசாமியின் அஞ்சான் படத்தில் பாடல் எழுத வந்த வாய்ப்பை உதறித் தள்ளியிருக்கிறார். அதற்கு காரணம் இனம் படம் தான்.
இனம் படத்தில் தமிழருக்கு எதிராக சந்தோஷ் சிவன் செய்த ஈனத்தனமான அரசியலைப் புரிந்து, அந்த கூட்டத்தை அறவே தவிர்க்க ஆரம்பித்துள்ளார் அறிவுமதி. லிங்குசாமி இப்போது எடுத்து வரும் படம் அஞ்சான். இதில் சூர்யா ஹீரோ. பெரிய பட்ஜெட் படம். இனம் படத்தை எடுத்த அதே சந்தோஷ் சிவன்தான் இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இந்தப் படத்துக்கு ஒரு பாடல் எழுதித் தருமாறு கேட்டு அறிவுமதிக்கு மெட்டு ஒன்றைக் கொடுத்தனுப்பியுள்ளார் லிங்குசாமி. அதைக் கேட்கவே விரும்பாத அறிவுமதி, மெட்டை திருப்பியனுப்பியதோடு, “லிங்குசாமி, இனம் படத்தை எடுத்த உங்களைப் போன்றவர்கள் படங்களில் பாட்டெழுதுவது என் இனத்துக்கு செய்யும் துரோகம். இனம் படத்தை எடுத்த சந்தோஷ் சிவன்தானே இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவாளர். அதில் நான் எப்படி பாடல் எழுத முடியும்..!” என்று திருப்பிக் கேட்டுள்ளார்.
அறிவுமதியின் இந்த செயலைப் பார்த்து செய்வதறியாது திகைத்த லிங்குசாமி வேறு ஒரு பாடலாசிரியரைத் தேடி வருகிறாராம்.
மதன் கார்க்கியை கேட்டுப் பார்க்கலாமே…?

No comments: