Header Ads

சிவகார்த்திகேயனுடன் மீண்டும ஜோடி சேரும் ஸ்ரீதிவ்யா!

விதார்த் நடித்த காட்டுமல்லி படத்துக்காக ஆந்திராவில் இருந்து தமிழுக்கு வந்தவர் ஸ்ரீதிவ்யா. ஆனால் அந்த படம் இன்னும் திரைக்கே வரவில்லை. அதன்பிறகு அவருக்கு கமிட்டான படம்தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரீதிவ்யா அந்த படத்தில் கிராமத்து அழகியாக வலம் வந்ததோடு, இயல்பாக நடித்து அதையடுத்து பல படங்களை கைப்பற்றியிருக்கிறார்.

இந்த நேரத்தில், எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கும் டாணா படம் மூலம் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேருகிறார் ஸ்ரீதிவ்யா. இதனால் எதிர்நீச்சல் படத்தில் நடித்த ப்ரியாஆனந்த், நந்திதா இருவரும் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். காரணம், எதிர்நீச்சல் டீம் மீண்டும் இணையப்போகிறது என்ற செய்திகள் வெளியானபோது, அப்படியென்றால் தங்களுக்கும் இடமிருக்கிறது என்றுதான் இவர்கள் நினைத்திருந்தனர்.

ஆனால், இப்போது அப்படம் பற்றிய செய்திகள் வெளியானபோது அவர்கள் இருவரில் ஒருவர் பெயர்கூட இடம்பெறவில்லை. அதனால் இருவரையும் இப்போது கழட்டிவிட்டிருப்பது அவர்களுக்கு அதிர்ச்சியையும் அதேசமயம் தங்கள் இடத்தை பிடித்துவிட்ட ஸ்ரீதிவ்யா மீது ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

No comments:

Powered by Blogger.