புலிகளின் புதிய தலைவர் கோபி உள்ளிட்ட மூவர் சுட்டுக்கொலை
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி உள்ளிட்ட மூவர் இன்று அதிகாலை இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முல்லைதீவு பொலிஸார் இவர்கள் மூவரையும் கைது செய்ததன் பின்னர் இவர்கள் மூவரும் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற போதே பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவரும் உயிரிழந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
இதே வேளை சில ஊடகங்களில் இதன் போது இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளமைக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளதுடன் இராணுவ வீரர் பயிற்சியின் போதே உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: