திரிஷாவை அசர வைத்த ஜெயம்ரவி!
உனக்கும் எனக்கும் படத்தில் ஜெயம்ரவியுடன் ஜோடி சேர்ந்த திரிஷா, இப்போது பூலோகம் படத்தில் இரண்டாவது முறையாக அவருடன் நடித்துள்ளார். இந்த படத்தில் வடசென்னை பாக்சராக நடித்துள்ள ஜெயம்ரவி, தனது உடல் எடையை பாக்சர் கெட்டப்புக்கு மாற்றி நடித்தது த்ரிஷாவை வியப்பில் ஆழ்த்தி விட்டதாம்.
குறிப்பாக, உனக்கும் எனக்கும் படத்தில் நடித்தபோது ஜெயம்ரவி ஒரு சாக்லேட் ஹீரோவாகத்தான் நடித்திருந்தார். ஆனால், இப்போது பூலோகம் படத்தில் அப்படியல்ல, ஒரு ஆக்ஷன் ஹீரோவாக தன்னை உருமாற்றியிருக்கிறார். அப்போது பார்த்த ஜெயம்ரவிக்கும், இப்போது பார்க்கும் ரவிக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் உள்ளது.
இந்த படத்துக்காக அவருடன் மயான கொள்ளை காட்சியிலும் நான் நடித்திருக்கிறேன். அந்த காட்சிக்காக அவர் தன்னை முழுசாக மாற்றிக்கொண்டு பிரமாதமாக நடித்தார். அதேப்போல், ஹாலிவுட் வில்லன் நாதன் ஜோன்ஸூடன் நடித்துள்ள சண்டை காட்சிக்காக பல மாதங்களாக ஜிம்மில் பயிற்சி எடுத்து ஒரு முழு பாக்சரை கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார். அந்த வகையில் இதுவரை எத்தனையோ நடிகர்களுடன் நான் நடித்திருந்தாலும் ஜெயம்ரவிதான் கடின உழைப்பாளியாகத் தெரிகிறார் என்கிறார் திரிஷா.

No comments: